நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நுரையீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலில் ஆக்ஸிஜனின் அளவு சமமான நிலையில் இருக்கும் பொழுது நம்முடைய சுவாசம் சீரான நிலையில் இருக்கும். ஆஸ்துமா, அலர்ஜி போன்ற நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகளைக் காண்போம். வெந்நீர் உடலை வெதுவெதுப்பாக வைத்திருத்தல் உணவு முறைகளில் சில மாற்றங்கள் வீட்டுமுறை மருத்துவம் மூச்சுப்பயிற்சி வைட்டமின் டி உணவுகள் வெந்நீர் மழைக்காலம் மற்றும் குளிர்காலம் துவங்குவது முதல், முடியும் வரை எப்பொழுதும் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது நல்லது. இது எப்பொழுதும் தும்மல் மற்றும் இருமல் வருவதை கட்டுப்படுத்தும். முடிந்த அளவு வெந்நீரில் கொதிக்க வைக்கும்போது, அதில் மிளகு, சீரகம் சிறிதளவு சேர்த்து வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் தொண்டையில் உள்ள குவளை மற்றும் நுரையீரலில் உள்ள சளி படிப்படியாக குறையும். பிறகு கை, கால் மற்றும் முகம் கழுவுவதற்கு வெந்நீரையே பயன்படுத்த வேண்டும். இல்லதரசிகள் தங்களுடைய வீட்டை தூய்மை செய்வதன் மூலம் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதற்கு அவர்கள் ஒட்டடை அடிக்கும் பொழுது முகக்கவசம் அணிவதன்...
கருத்துகள்
கருத்துரையிடுக