முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவது எப்படி

நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நுரையீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலில் ஆக்ஸிஜனின் அளவு சமமான நிலையில் இருக்கும் பொழுது நம்முடைய சுவாசம் சீரான நிலையில் இருக்கும். ஆஸ்துமா, அலர்ஜி போன்ற நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகளைக் காண்போம்.

  • வெந்நீர்
  • உடலை வெதுவெதுப்பாக வைத்திருத்தல்
  • உணவு முறைகளில் சில மாற்றங்கள்
  • வீட்டுமுறை மருத்துவம்
  • மூச்சுப்பயிற்சி
  • வைட்டமின் டி உணவுகள்

வெந்நீர்

மழைக்காலம் மற்றும் குளிர்காலம் துவங்குவது முதல், முடியும் வரை எப்பொழுதும் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது நல்லது. இது எப்பொழுதும் தும்மல் மற்றும் இருமல் வருவதை கட்டுப்படுத்தும். முடிந்த அளவு வெந்நீரில் கொதிக்க வைக்கும்போது, அதில் மிளகு, சீரகம் சிறிதளவு சேர்த்து வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் தொண்டையில் உள்ள குவளை மற்றும் நுரையீரலில் உள்ள சளி படிப்படியாக குறையும். பிறகு கை, கால் மற்றும் முகம் கழுவுவதற்கு வெந்நீரையே பயன்படுத்த வேண்டும். இல்லதரசிகள் தங்களுடைய வீட்டை தூய்மை  செய்வதன் மூலம் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதற்கு அவர்கள் ஒட்டடை அடிக்கும் பொழுது முகக்கவசம் அணிவதன் மூலம் அவர்களின் நுரையீரல் நுண்ணுயிர் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படும். வீடு துடைக்கும் பொழுது வெந்நீர் கொண்டு துடைப்பது அவர்கள் உடல் நலத்திற்கு சிறந்தது.

உடலை வெதுவெதுப்பாக வைத்திருத்தல்

ஆஸ்துமா அலர்ஜி உள்ளவர்கள் குளிர்காலங்களில் தங்களுடைய உடலை வெதுவெதுப்பான நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும். இவர்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும்போதும் இரண்டு காதுகளிலும் பஞ்சை வைத்துக் கொள்வது ஈரத்தன்மையுள்ள காற்றிலிருந்து பரவும் நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவும். மின்விசிறியின் அடியில் அருகாமையில் படுத்து உறங்குவதை தவிர்க்கவேண்டும். அப்படி படுத்து உறங்கும் போது அதிகாலை 4 மணி அளவில் இருந்து உங்களுக்கு தும்மல் இருமல் ஆரம்பிக்கக் கூடும். அதிகாலையில் ஏற்படும் தும்மல், இருமல் போன்றவற்றை தவிர்க்க ஸ்வெட்டர் அணிவதும், உங்கள் படுக்கையை தடிமனாக தயார் செய்து கொள்வதும் உங்களின் உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள உதவும். வீட்டிற்குள் செருப்பு அல்லது சாக்ஸ் (காலுறை) அணிவதும் உங்கள் உடலை வெது வெதுப்பிப்பாக வைத்திருக்க உதவும்.

உணவு முறைகளில் சில மாற்றங்கள்

மழை மற்றும் குளிர்காலங்களிலில் மட்டும் நாம் நம்முடைய உடல் நலத்திற்காக சில உணவு பழக்க வழக்கங்களை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவு மூன்று வேளைகளிலும் சூடாக சாப்பிட வேண்டும். நீர்ச்சத்துள்ள காய்கறிகளான பூசணிக்காய், சீமை கத்தரிக்காய் மற்றும் முள்ளங்கி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதேபோல் பப்பாளி, வாழைப்பழம், தர்பூசணி போன்ற பழங்களையும் தவிர்ப்பது நல்லது. பால், தயிர் மற்றும் ஐஸ்க்ரீம் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. எல்லா வகையான உணவுகளிலும் மிளகு சேர்த்துக் கொள்வது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம்முடைய மருத்துவ செலவை குறைக்கும்.

வீட்டுமுறை மருத்துவம்

நமக்கு லேசான சளி மற்றும் மூச்சுத் திணறல் இருக்கும்போதே, பாலில் மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து காலை மாலை இரண்டு வேளையும் மூன்று நாள் குடித்தால் நல்ல பயன் கிடைக்கும். அல்லது பட்டையை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை எடுத்து அதனை தேனில் கலந்து சாப்பிட்டு வர நுரையீரலில் தங்கியிருக்கும் கபத்தைக் கரைக்கிறது. தலைபாரம், தும்மல் மற்றும் மூக்கில் நீர்வடிதல் போன்ற அலர்ஜி சம்பந்தமான நோய்களுக்கு வெந்நீரில் கருநொச்சி இலை, கொத்துமல்லி இலை, துளசி, மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு போன்றவற்றை வெந்நீரில் சேர்த்து 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலையில் இருக்கும் நீரை வடியச்செய்து சைனஸில்  இருந்து நம்மை பாதுகாக்கும்.

மூச்சுப்பயிற்சி


நாம் அதிகாலையில் எழுந்து மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும். மூச்சுப் பயிற்சி செய்ய நாம் நேரான நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும், பின்பு மூச்சை மெதுவாக இழுத்து அப்படியே ஐந்து நொடி ஆக்சிஜனை நிறுத்தி வைத்து பின்பு மெதுவாக வெளிவிட வேண்டும். இது போன்று காலை மாலை இரண்டு வேளைகளிலும் செய்வதால் நுரையீரலுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் செல்கிறது . அதனால் சுவாசம் சீரான நிலையில் இருக்கிறது பின்பு மூக்கில் ஒரு துவாரத்தின் வழியே மூச்சை இழுத்து மறு துவாரத்தின் மூலம் மெதுவாக வெளியிடும்போது மூக்கடைப்பு குணமாகிறது. பலூன் ஊதுவது கூட ஒரு விதமான மூச்சுப்பயிற்சி தான், அப்படி ஊதுவதால் நம் நுரையீரல் விரிவடைந்து தேவையான ஆக்சிஜனை பெறுகிறது.

வைட்டமின் டி உணவுகள்


நாம் நமது உணவில் எப்பொழுதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும், அதில் விட்டமின் டி அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும். விட்டமின் டி நமக்கு நேரடியாக சூரிய ஒளியில் இருந்து கிடைக்கிறது மற்றும் காளான் சாப்பிடும்போதும் கிடைக்கிறது. நீங்கள் அசைவப் பிரியராக இருந்தால் முட்டையின் மஞ்சள் கருவும் மற்றும் சால்மன் என்ற மீன் வகையிலும் விட்டமின் டி அதிகமாக இருப்பதால் வாரத்தில் ஒரு முறை இதனை சாப்பிட்டு வரலாம். இந்த உணவுகள் விட்டமின் டி பற்றாக்குறையை சமன்செய்து மழைக்காலங்களில் வரும் மூச்சுத்திணறல் சம்பந்தமான நோய்களை கட்டுக்குள்  வைக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

க்ரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் ஐந்துவிதமான நன்மைகள்

க்ரீன் டீ தற்போது எல்லோராலும் அதிகம் விரும்பப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு கோப்பை க்ரீன் டி குடிப்பது பத்து ஆப்பிள் பழச்சாறு குடிப்பதற்கு சமமானது. இது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புதிய செல்களை உற்பத்தி செய்து நமது வாழ்நாளை அதிகரிக்கிறது. இதனை பொடியாக வாங்காமல் இலையாக வாங்கி பயன்படுத்துவது சிறந்தது. இதை 12 வயதிற்க்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் பருகலாம். இது 12 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் மெட்டபாலிசத்தை பாதிக்கும். இதனை அருந்துவதால் கீழ்கண்ட நன்மைகள் ஏற்படும். உடல் எடையை குறைக்கும் சர்க்கரையின் அளவை சமன்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புற்று நோயை தடுக்கும் வாய் துர்நாற்றம் மற்றும் சொத்தை பல் வரமால் தடுக்கும் க்ரீன் டீயை ஆர்டர் செய்யவும் உடல் எடையை குறைக்கும் க்ரீன் டீ குடிப்பதனால், அதில் உள்ள மூலப்ப்பொருள் நம் உடம்பில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச்செய்து உடல் எடையை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகிறது. க்ரீன் டீ குடிப்பதனால் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு எனப்படும் LDI-ஐ கரைக்கிறது. இதனால் நமக்கு  உடல் எடை சீரான நிலைக்கு வருகிறது. இதனை குடிப்பதனால், குறிப...

சுவையான ஆட்டு குடல் கிரேவி

எப்படி சுத்தம் செய்வது  ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும், பிறகு அந்த வெந்நீரில் குடலை போட்டு 2 நிமிடம் கிளறவும் இப்பொழுது கூடல் கொஞ்சம் தடிமனாக மாறி நாம் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு நமக்கு தேவையான முறையில் நறுக்கிக் கொள்ளவும், பின்பு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 5 முறை நன்றாகக் கழுவிக்கொள்ளவும். இப்பொழுது குடல் பார்ப்பதற்கு பளிச்சென்று தெரியும் இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும்  உப்பு சேர்த்து குக்க்கரில் 7 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். தேவையான பொருள்கள் நன்கு சுத்தம் செய்த குடல் கறி - ஒரு கிலோ இஞ்சி பூண்டு தொக்கு - 2 ஸ்பூன் சின்ன வெங்காயம் நறுக்கியது -  ஒரு கப் தக்காளி நறுக்கியது - அரை கப் கருவேப்பிலை, கொத்தமல்லி - இரண்டு கொத்து பச்சைமிளகாய் - 4 சீரகம், மிளகு, சோம்பு - தலா அரை ஸ்பூன் பொன்னிறமாக வறுத்து அரைத்துக் கொள்ளவும் மல்லி தூள் - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - 2 ஸ்பூன் உப்பு தேவையான - அளவு எண்ணெய் தேவையான அளவு பட்டை கிராம்பு ஏலக்காய் தேங்காய் அரவை - கால் கப் செய்யும் முறை அடுப்பில் கடாயை வைத்து சூடேறிய பின்பு...