எப்படி சுத்தம் செய்வது
ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும், பிறகு அந்த வெந்நீரில் குடலை போட்டு 2 நிமிடம் கிளறவும் இப்பொழுது கூடல் கொஞ்சம் தடிமனாக மாறி நாம் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு நமக்கு தேவையான முறையில் நறுக்கிக் கொள்ளவும், பின்பு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 5 முறை நன்றாகக் கழுவிக்கொள்ளவும். இப்பொழுது குடல் பார்ப்பதற்கு பளிச்சென்று தெரியும் இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து குக்க்கரில் 7 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
தேவையான பொருள்கள்
- நன்கு சுத்தம் செய்த குடல் கறி - ஒரு கிலோ
- இஞ்சி பூண்டு தொக்கு - 2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் நறுக்கியது - ஒரு கப்
- தக்காளி நறுக்கியது - அரை கப்
- கருவேப்பிலை, கொத்தமல்லி - இரண்டு கொத்து
- பச்சைமிளகாய் - 4
- சீரகம், மிளகு, சோம்பு - தலா அரை ஸ்பூன் பொன்னிறமாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்
- மல்லி தூள் - 1 ஸ்பூன்
- மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
- உப்பு தேவையான - அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- பட்டை
- கிராம்பு
- ஏலக்காய்
- தேங்காய் அரவை - கால் கப்
செய்யும் முறை
அடுப்பில் கடாயை வைத்து சூடேறிய பின்பு, உங்கள் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும். அத்துடன் கறிவேப்பிலை, மல்லி இலை மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும், மல்லி இலையை முதலில் போட்டு வதக்கும் போது குடலின் வாசனை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும், சுவையாகவும் இருக்கும். அடுத்து நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும். நன்றாக வதங்கிய பிறகு நாம் அரைத்து வைத்த (சோம்பு, சீரகம், மிளகு) பொடியை சேர்க்கவும்.
2 நிமிடம் கழித்து மிளகாய்பொடி மல்லித்தூள் சேர்க்கவும். நாம் குடலில் ஏற்கனவே உப்பு சேர்த்து வேக வைத்து இருப்பதால், தேவைகேற்ப உப்புபோட்டு கிளறி விட்டு, அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் ஊற்றி கொள்ளவும். ஒரு ஐந்து நிமிடம் மூடி வைக்கவும் பிறகு அடுப்பை அணைத்து விடவும் இப்பொழுது ருசியான குடல் கிரேவி தயார்.
- சப்பாத்தி
- இட்லி
- தோசை
- பரோட்டா
- சாப்பாடு
மருத்துவப் பயன்கள்
அதிகப்படியான கொழுப்பு இருக்காது, இதனால் இதனை அனைவரும் சாப்பிடலாம். நாம் நன்றாக குக்கரில் வேக வைத்து விட்டதால் மிருதுவாக இருக்கும், குழந்தைகள் விரும்பி உண்பார்கள். முக்கியமாக வயிற்று புண், வாய்ப்புண் நீண்ட நாளாக இருந்தாலும் இதை சாப்பிட்டு வர நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அசைவ பிரியர்களுக்கு கண்டிப்பாக இந்த முறையில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பார்கள். அதிகமாக எடுத்துக் கொண்டு அஜீரண கோளாறு ஏற்பட்டால் கொஞ்சம் வெந்நீர் வைத்து அதனுடன் சீரகம் சேர்த்து குடித்தால் நல்லது.
கருத்துகள்
கருத்துரையிடுக